#BREAKING : தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு :

1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு;

11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு

12-ம் வகுப்பு – ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

பொதுத்தேர்வு

2023 மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கும்.

2023 மார்ச் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கும்

2023 ஏப்ரல் 3-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்.

மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.