#BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – 20-ஆம் தேதி முடிவு!

Minister Anbil Mahesh has announced that the decision on whether the schools will be reopened from September 1 will be taken on the 20th.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பில், தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், வரும் 20ம் தேதி இதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பள்ளிகள் திறந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.