தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் P.E.T […]
சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இடைநிலை ஆசியர்கள் என பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தை தொடர்ந்து, பள்ளிக்கல்விதுறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி ஏற்பட்டு, அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில், […]
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், தங்கள் 30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று (அக்டோபர் […]
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு. சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் […]
வதந்திகளை நம்பி அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம். ஆதாரமற்ற அறிக்கைவிடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் நாம் ஊர் பள்ளி திட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. திராவிட மாடல் அரசின் கீழ் பொது கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் பள்ளி திட்டம் பற்றி புரிதல் இல்லாதவர்கள் கூறும் வதந்திகளை நம்பி அறிக்கை […]
இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக […]
தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் நாகையை சேர்ந்த மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 […]
பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிற்பகல் வெளியிடுகிறார். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுகளுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மதியம் 2.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் […]
திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, […]
பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளியை சுத்தம் செய்யவதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு முன்னறிவிப்பின்றி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது […]
தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என நிதிநிலையை பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார். இல்லம் […]
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் பொறுப்புக்கு தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவைத் தலைவர், மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் […]
கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனியாமூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கட்டாய கல்வி உரிமை […]
கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என அமைச்சர் அறிவிப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் வன்முறையில் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதன்பி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் […]
மாணவி மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த சில நாட்களாக கலவரமாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் […]
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் . தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு […]
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்ந்து முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை […]
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்து, வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]
பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி […]
கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]