#Breaking:பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

#Breaking: Raising the age of marriage for women from 18 to 21: Union Cabinet approval!

பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனினும்,இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும், அதன்பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்படி,நடப்பு கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

#Breaking:பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்