#BREAKING: மேகதாது அணை.., ஆலோசனை நடந்த மத்திய அரசு திட்டம்..!

It has been reported that the Central Government is planning to hold consultations with the Chief Ministers of 4 states regarding the Mekedatu Dam issue.

மேகதாது அணை விவகாரம் குறித்து 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா அரசு கூறிவரும் நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அணை கட்ட அனுமதி வழங்கமாட்டோம் என அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

தமிழக அரசு இந்த அணையை எக்காரணத்தை கொண்டும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக உள்ளது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநில முதல்வர்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.