தமிழ்நாடு – கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி பிரச்சனை தீவிரமாக இருந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய போதிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது என்றும் கூடுதல் நீரை திறந்துவிட கோரியும் சட்ட போராட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், உரிய நீரை காவிரியில் இருந்து திறக்கவில்லை. போதிய நீர் இல்லாததால் […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் […]
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில்,இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென […]
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தனி தீர்மானம்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் […]
கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது. இந்திய […]
மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். மேகதாது விவகாரம் குறித்து இன்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லி பயணம் செய்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாதுவில் அணை அமைக்க உடனடியாக அனுமதி தரவேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடியூரப்பாயுடன், கர்நாடகா சட்டத்துறை அமைச்சரும் இன்று டெல்லி வருகிறார். இன்று மதியம் கர்நாடகாவில் இருந்து புறப்படும் முதல்வர் எடியூரப்பா மாலை பிரதமர் மோடியை சந்திக்கஉள்ளார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். மேகதாது விவகாரம் குறித்து பிரதமரிடம் முறையிட தமிழக அனைத்து கட்சி குழுவினர் டெல்லி செல்லும் நிலையில், நாளை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் டெல்லி பயணம் செய்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாதுவில் அணை அமைக்க உடனடியாக அனுமதி தரவேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடியூரப்பாயுடன், கர்நாடகா சட்டத்துறை அமைச்சரும் நாளை டெல்லி வருகிறார். நாளை மதியம் கர்நாடகாவில் […]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் குழு நாளை டெல்லி செல்கிறது. நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரைச் சந்திக்க நாளை அனைத்துக் கட்சிக் குழு டெல்லி செல்கிறது. நாளை மறுநாள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அனைத்து கட்சி குழுவினர் சந்திக்க உள்ளனர். […]
மேகதாது அணை விவகாரம் குறித்து 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா அரசு கூறிவரும் நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அணை கட்ட அனுமதி வழங்கமாட்டோம் என அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. […]
மேகதாது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், […]
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றின் நீரை சேமித்து வைக்கும் பொருட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் ஆணை, கல்லணை, மேலணை ஆகியவை உள்ளன. இந்த இரு மாநிலங்களும் இந்த நீரை பகிர்ந்து வருவதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையை […]
மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் […]
மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நேற்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல […]
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். கர்நாடக மாநில தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும்,மின் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் வந்து அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து […]
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்றும் அவ்வாறான சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக மத்திய நீர்வள ஆணையத்திற்குவிண்ணப்பித்துள்ளது.மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்துள்ளது. இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது. இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் சார்பில் பலத்த […]