#BREAKING: மேலும் ஒரு வழக்கில் மாரிதாஸ் கைது ..!

தேனி சிறையில் உள்ள யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

தேனி சிறையில் உள்ள யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் நேற்று முன்தினம்  யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.  மரியதாஸை கைது செய்ய போலீசார் சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் உள்ளார். இந்நிலையில்,  யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யுயப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.