#BREAKING: மாநிலங்களவை திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா – திமுக தலைவர் அறிவிப்பு!

Announcement that MM Abdullah will contest on behalf of DMK in the forthcoming state level elections in Tamil Nadu.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 செப்டம்பர் 13ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராகள் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார். இதனிடையே, எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுக எம்பி முகமது ஜனின் மறைவிற்கு பிறகு அந்த இடம் காலியாக இருந்தது. தற்போது அந்த இடத்துக்கும் நடக்கும் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா போட்டியிடுகிறார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அப்துல்லா கூறியுள்ளார்.

unknown node
#BREAKING: மாநிலங்களவை திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா – திமுக தலைவர் அறிவிப்பு!