பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில், எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.கண்டிப்பாக ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் வரும் என்று பேசினார்.இவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த வாரம்பாஜக மாநில துணைத்தலைவராக இருந்தஅரசகுமார்திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் ஊடகங்களில் பேச பாஜக சார்பில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்அரசகுமார்.