#Breaking : கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டம்..! இபிஎஸ் உள்ளிட்ட எம்எல்.ஏ-க்கள் கைது..!

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது.

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடததப்படும் என நேற்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.