Congress : பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தாண்டு ஐந்தாவது முறையாக நாளை தமிழக வருகிறார். நாள் கன்னியாகுமரியில் நடைபெறும் இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு! இதனால், கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு […]
திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம். திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு, தேனி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் செல்லூர் ராஜு, ஓமலூரில் செம்மலை, சத்தியமங்கலத்தில் […]
ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் இன்று ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. தமிழ்நாடு […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி காலை 10 மணிக்கு ஆளுநர் […]
அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது என வாசன் பேட்டி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சரியாக […]
பால் விலை உயர்வை கண்டித்து அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டி. வ.உ.சி நினைவு தினத்தை ஒட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசனும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பால் விலை உயர்வை […]
பாஜக சார்பில், 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் […]
விசிக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் இன்று மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விசிக சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை நவம்பர்-01 மொழிவழி தேசிய உரிமைநாள். சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழக மீனவர்கள்மீது […]
தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடததப்படும் என நேற்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், […]
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் […]
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன […]
மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் […]
மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் […]
இன்று போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச் செயலர் வி.தயானந்தம், மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 14-வது ஊதிய ஒப்பந்தம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓட்டுநர், நடத்துநர்கள் அவரவர் வழித்தடங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இல்லாத நடத்துநர்களுக்கு, மாற்றுப் பணி […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம். தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன் அமலுக்கு வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், இதனை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற […]
திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் ஈபிஎஸ் குற்றச்சாட்டி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர், இன்று ஆளும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். எனவே தான் இந்த போராட்டம் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மின்கட்டண உயர்வு அரசில் பிரபலங்கள் பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக இன்று ஆர்ப்பாட்டம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் முதன்மையான இழப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.