#BREAKING: தொகுதி பங்கீடு இழுபறி.. பாஜக நிர்வாகிகள் ஆலோசனை..!

BJP executives are consulting at the Chennai Kamalayam on the block allocation with the AIADMK.

அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறி குறித்து சென்னை கமலாயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுகவுடன் 4 கட்டங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றும் இந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறி குறித்து சென்னை கமலாயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங், தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பாஜக நிர்வாகிகள் இன்று மாலை அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.