மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே தொகுதிப்பங்கீடு..!

The first round of block allocation talks between the Marxist Communist Party began at Anna Aruvalaya.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன்,ஜி ராமகிருஷ்ணன் மற்றும் சவுந்தராஜன் உள்ளிடோர் டி.ஆர் பாலு தலைமையிலான  தொகுதிப்பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.