முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி – பெண் உட்பட 6 பேர் கைது

Six people have been arrested for trying to display a black flag on behalf of the Human Rights Protection Party on the way to Chief Minister Palanisamy Nellai.

முதல்வர் நெல்லை செல்லும் வழியில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பாக கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 6 பேர் கைது.

நெல்லை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை முடித்த பிறகு நாங்குநேரி பிரச்சாரத்திக்கு சென்றபோது அங்குள்ள சுங்கச்சாவடி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட முயன்ற பெண் ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீர் மரப்பினரருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இவர்களின் கோரிக்கையானது தென்மாவட்டங்கள் சீர் மரபினர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறோம், எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. அதனால், அதிமுகவை நிராகரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.