#BREAKING: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது- நயினார் நாகேந்திரன்..!

BJP Assembly Committee Chairman Nayyar Nagendran has said that the BJP will not participate in the all-party meeting.

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.