தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது – திருமாவளவன்

viduthalai chiruthaigal katchi leader Thirumavalavan has said that the AIADMK-led alliance should be defeated.

அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.  தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள் என்றும் அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜகதான் என கூறி, அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.