குஜராத்தில் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

A meeting of BJP MLAs will be held in Gujarat today at 3 pm.

குஜராத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். குஜராத் முதல்வர் பதவியை விஜய் ரூபானி  ராஜினாமா செய்த நிலையில் பாஜக எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது.