குஜராத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார். இந்நிலையில், […]
சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து இரண்டு புதிய மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக மாற்றுவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, சூரத்தில் கொரோனா வைரஸ் குறித்த நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாநில துணை முதல்வரான நிதின் படேல், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜூன் 20 முதல் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து ஜூன் 29 முதல் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். […]
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை குஜராத்தில் 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அம்மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஹாடியா ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவாலாவும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை […]