காஷ்மீரில் பாஜக தலைவர், அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!

The BJP leader and his wife were shot dead by terrorists in Jammu and Kashmir's Anantnag district today.

ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பானூ மீதான கொடூர பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைத்தனமான செயல், வன்முறையில் ஈடுபடுபவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என  தெரிவித்தார்.

குலாம் ரசூல் தார் அனந்த்நாகில் ஒரு வாடகை விடுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.