சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தம்பதியினர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஃபர்ஹா மற்றும் தப்ரேஸ் ஆகியோர் பயங்கரவாதிகளால் அனந்த்நாக் பகுதியில் தாக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறையினர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ஜூம் என்ற ராணுவ நாய் தன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து போராடியது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையில் நடந்த தாக்குதலில் ஜூம் என்ற ராணுவ நாய் குண்டு அடிபட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியான டாங்பவா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். அதன் பிறகு ஜூம் என்ற […]
ஜம்மு & காஸ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாஜக தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாரதிய ஜனதா தலைவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். குல்காமில் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு ஆகியோரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தம்பதியினர் மருத்துவமனைக்கு […]
ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் […]
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், துப்பாக்கிச் சண்டையாக மாறியது. இந்த சம்பவத்தின் போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் கூறினார். என்கவுன்டர் செய்ய இடத்திலிருந்து ஏ.கே. துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். #AnantnagEncounterUpdate: 01 unidentified #terrorist killed. Search going on. Further details […]
அனந்த்நாக்கில் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்தததாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரிகுஃப்வாரா என்ற பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான இரண்டு தீவிரவாதிகளை படையினர் சுட்டு கொலை செய்தததாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து இரண்டு ஏ.கே .47 தூப்பாக்கியை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். #AnantnagEncounterUpdate: 01 more […]
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள குல் சோஹாரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தில் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் லாலன் (Verinag forests ) வெரினாக் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தின் 02 பாரா மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் வெரினாக் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், இந்திய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், இது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.