அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு.!

BJP candidate from Aravakurichi constituency Annamalai has announced that his candidature has been accepted.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், சில தகவல்கள் மறைக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அண்ணாமலையின் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி அரவக்குறிச்சி சென்று ஆலோசனை நடத்திய பின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.