200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்வீட்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை இருநூறு கோடியை தாண்டி உள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பில்கேட்ஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல். பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசுடனான தொடர்ச்சியான கூட்டணிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node