சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா அரசியல் களம் ! செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள் இன்று மதியம் மும்பையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும்

பாஜக தலைவர்கள் இன்று மதியம் மும்பையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார்  பதவி ஏற்றார்.இதனால்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், அஜித் பவார் முடிவு தனிப்பட்ட முடிவு என்றும் கட்சியின் முடிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஆட்சி அமைந்த நிலையிலும் குழப்பம் நிலவி வருகின்ற நிலையில் மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் இன்று மதியம் மும்பையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.