கவனத்திற்கு: பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்!!

Plus 2 students, students can download the first mark certificate from the website today.

பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த 19ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டியிருந்தார். மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 பேர் என்றும் மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி,www.dge.tn.gov.in&www.dge.tn.nic.inஆகிய இணையதளங்களில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.