சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில்தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்சீமான்.தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.