#BREAKING : மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு ரத்து..! 5 வழக்குகளின் விசாரணைக்கு தடை..!

Chennai High Court quashes another defamation suit against MK Stalin.

சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்து செய்தது.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது தமிழக அரசு சார்பில்  தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சதீஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்துசெய்தது. மேலும், 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அவதூறு வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 8 அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.