அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது; உணவு மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய அமைச்சர்..!

கோவிலில் உணவருந்த அனுமதியளிக்கவில்லை என பேட்டியளித்த பெண்ணுடம் உணவருந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

கோவிலில் உணவருந்த அனுமதியளிக்கவில்லை என பேட்டியளித்த பெண்ணுடம் உணவருந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றபோதுஉணவருந்த அனுமதியளிக்கவில்லைஎனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக நரிக்குறவ பெண் ஒருவர் குற்றச்சாட்டினார்.

unknown node

இதுகுறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ குற்றச்சாட்டிய நரிக்குறவ பெண் உள்பட பொதுமக்களுடன் அமர்ந்து அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாப்பிட்டார். பின்னர் நரிக்குறவ மக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோயில் வளாகத்தில் வேட்டி, சேலைகளை வழங்கினார்.