கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.! இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் […]
இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது […]
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. தமிழ்நாட்டில் கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில் மற்றும் சங்கரன் கோயில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது […]
மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, […]
திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுவிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற போவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிருந்தார். இந்த நிலையில், 48 முதுநிலை திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.அந்நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிலையில்,கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு […]
நாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கருத்து. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், கோயில்களில் அரசியவாதிகளுக்கு என்ன வேலை என்று மதுரை ஆதினம் தெரிவித்ததை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மிகவும் அடக்கி வாசித்துக் கொண்டியிருக்கிறோம். நாங்களும் எகிறி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது என்பதால் சற்று பின்னால் வருகிறோம் என அதிரடியாக […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு […]
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் விரைவில் சுமுகமான ஒரு நல்ல முடிவை எடுப்பார். அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பார். ஆதிக்கர், நாத்திகர் என அனைவரது மனமும் குளிரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது, […]
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அன்னை தமிழில் அர்ச்சனை அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை தரப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை […]
சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்துதான் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி உயா்த்தப்படுவதாகவும், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த வரி உயா்வு அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக […]
கோவிலில் உணவருந்த அனுமதியளிக்கவில்லை என பேட்டியளித்த பெண்ணுடம் உணவருந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றபோது உணவருந்த அனுமதியளிக்கவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக நரிக்குறவ பெண் ஒருவர் குற்றச்சாட்டினார். இதுகுறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ குற்றச்சாட்டிய நரிக்குறவ பெண் உள்பட […]
பழனி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 4-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். அதன்படி, இந்த அறிவிப்பானது அமலுக்கு வந்துள்ள நிலையில், பழனி முருகன் கோயிலில், இலவச டோக்கன் கொடுக்கப்பட்டு, கட்டணமில்லா முடிக்காணிக்கை செல்கின்றனர். இத்திட்டத்திற்கு பக்தர்கள், இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்க […]
திருப்பதிக்கு இணையாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உருவாக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கடந்த காலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை இந்து இந்துசமய அறநிலையத்துறை எடுத்துள்ளது என்றும் கோயில்களின் மேம்பாட்டுக்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட […]
சென்னையில் அறநிலையத்துறை சார்பில், 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தகவல். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் அறநிலையத்துறை சார்பில், இரண்டு புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டே தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, கோயில் […]
தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவில்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்கு நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை […]