Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். […]
மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்” நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. […]
கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.! இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் […]
மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது என சேகர்பாபு பேட்டி. சென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது; அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி குறை […]
தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என சேகர் பாபு பேட்டி. அமைச்சர் சேகர்பாபு சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும், பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்களின் சிலர் என்னைத் தொடர்பு கொண்ட திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள […]
அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ் தற்கொலை. தமிழகத்தின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ். இவருக்கு வயது 63. இவர் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேவராஜ் நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.அந்நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிலையில்,கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு […]
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து,மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.மேலும்,அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் […]
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,முதல்வர்,பிரதமர் மற்றும் அதிமுக சார்பில் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு […]
திருத்தணி முருகன் கோவிலுக்கான வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகளை அமைக்க அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு , தமிழ்நாட்டில் காலியாக உள்ள கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி கோவிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகளும் விரைவில் பலப்படுத்த நடவடிக்கை […]
நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. […]
தமிழக காவல்துறை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில். சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை. டிஜிபியின் கையில் இருந்து காவல்துறை நழுவிவிட்டது. ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்தை பேசியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். பொறுமைக்கும் ஒரு எல்லை […]
மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு. மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இலவச உணவு, உடை, உறைவிடத்துடன், மாதம் ரூ.3000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு இந்து சமய அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் அறநிலையத்துறை இந்து சமய அறநிலையத்துறையின் ரூபாய் 1 கோடியே […]
கோவிலில் உணவருந்த அனுமதியளிக்கவில்லை என பேட்டியளித்த பெண்ணுடம் உணவருந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றபோது உணவருந்த அனுமதியளிக்கவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக நரிக்குறவ பெண் ஒருவர் குற்றச்சாட்டினார். இதுகுறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ குற்றச்சாட்டிய நரிக்குறவ பெண் உள்பட […]