#BREAKING: வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!

Union Home Minister Amit Shah will arrive in Villupuram on the 28th.

வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரஉள்ளார்.

தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் உள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் நிர்மலா சீதாராமன் ராஜ்நாத்சிங் மோடி ஆயுதம் இறங்குகின்றன 28ஆம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் அடுத்தடுத்த நாட்களில் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் மற்றும் மோடி ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். வரும் 19-ம் தேதி நிர்மலா சீதாராமனும், 21-ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வருகிற 25-ஆம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து, 28-ஆம் தேதி மீண்டும் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்துக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கேரளா, புதுச்சேரி, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ளது.