தமிழிசை சௌந்தரராஜன் : சமீபத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொன்டு இருந்தார்கள். அப்போது மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கொண்டு இருந்த சமயத்தில் அமித் ஷா அவரை கூப்பிட்டு எதோ பேசினார். சற்று கோபத்துடன் அமித் ஷா பேசுவதாகவும் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்த […]
சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசிய வீடியோக்கள் கட்சிக்குள் சலனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், ஆந்திராவில் இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே, தமிழிசையை அழைத்து அமித்ஷா கோபத்துடன் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், தமிழக பாஜகவினருக்கு இடையே நடக்கும் உட்கட்சி விவகாரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது இது தொடர்பான வீடியோ சமூக […]
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசும் போது, “பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார்” என்று பேசினார். இது தொடர்பாக […]
இம்மாதம் நடைபெறும் 5 மாநில தேர்தல் என்பது அடுத்து வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், 5 மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் மாநில அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாலும் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு பற்றிய பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறார். இதுகுறித்து இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ரூ.450-க்கு வழங்கப்படும் என்றும் கூறினார். “ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 65 லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 3.70 லட்சம் பேருக்கு […]
1980களில் இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமான RSS பிரிவில் தன்னை இணைத்து கொண்டு, அதன் பிறகு பாஜகவில் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை நிர்வகித்து, 1989இல் அகமதாபாத் பாஜக நகர செயலாளராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அதன் பிறகு 1997இல் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலாக எம்எல்ஏ ஆனவர் அமித்ஷா. இதுவரை 4 முறை எம்எல்ஏவாகவும், அடுத்து குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது பல்வேறு துறைக […]
திரிபுராவில் ஜன 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிபுராவில் ஜனவரி 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ரதயாத்திரையில் சுமார் 200 பிரச்சார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் தர்மாநகரில் துவங்கி ஜனவரி 2 வரை ரதயாத்திரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் […]
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா. திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு மீண்டும் புறப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரின் அடுத்தடுத்து வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பு. திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். எனவே, காந்தி கிராம கிராமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 11-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். பிரதமர் திண்டுக்கல் […]
இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது என கேஎஸ் அழகிரி கருத்து. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பதிவிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை […]
“இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல!” தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் […]
உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு. நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வரும் இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள […]
அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு செல்வதற்கான யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நடப்பு வருடத்தில் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது.இதன்காரணமாக,அமர்நாத் யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் குகைக்கு […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில்,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள்,பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்,தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும் எனவும்,அதைப்போல தென்னிந்திய மாநிலங்களான கேரளா,ஆந்திரா, ஒடிசா ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி விரைவில் மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் […]
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் […]
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி […]
காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை. ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ […]
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களை எதிர்ப்பை தெரிவித்து கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அமித் ஷாவின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் […]
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய […]