முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது – விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு ...!

viduthalai siruthaikal has announced that the first person to receive the Ambedkar Flame Award this year.

இந்தாண்டு முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவ்வாறு விருதுகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணன் அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது  குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால் அவர்களுக்கும், காயிதேமில்லத் பிறை விருது அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமது அவர்களுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமி அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதோ அந்த அறிவிப்பு பதிவு,

unknown node