மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா : முதல்வர் ஸ்டாலின் உரை!

Chief Minister MK Stalin addressed a function at Anna Arivalayam today.

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் பொழுது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த விழாவின் பொழுது 20,000-க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து திமுகவில் இணைய வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்துவிட்டேன் என கூறியதற்கு, நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க என கூறியுள்ளார். மேலும், தருமபுரி மாவட்டம் வீக் என அடிக்கடி கூறப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா : முதல்வர் ஸ்டாலின் உரை!