பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.இதன் விளைவாக இன்று அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன் என்றும் அந்தக் கட்சியில்தான் இருப்பேன்.எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார் தான் என்று பதிவிட்டார்.
unknown nodeபாஜகவுடன் கூட்டணியா ? அப்படி ஒரு பேச்சுக்கே இடமில்லை -தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அதிரடி
— Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019