கொரோனா தொற்று குறைந்ததும் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு!

Minister Sekarbabu, who came to inspect the Meenakshi Amman temple in Madurai, has said that all the temples in Tamil Nadu will be reopened when the corona infection subsides.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆய்வுப் பணிகளுக்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் வருகை தந்துள்ளார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆய்வு பணிக்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்ததாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு மிக அதிக அளவில் குறைந்து வருகிறது என கூறி உள்ளார். மேலும் தற்பொழுது கோவில்களில் பக்தர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படவில்லை, மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 24 வயது கோவில் யானை பார்வதியின் உடல்நிலை குறித்தும் கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

கொரோனா தொற்று குறைந்ததும் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு!