அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் அறிவிப்பு..!

It is reported that the sixth general meeting of the party will be held on March 3, 2021 in Thoothukudi.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாகிகள்/ மண்டல அமைப்புச் செயலாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் உறுப்பினர்கள்  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் விதி எண் 14,பிரிவு 4ன் படி, கட்சியின் ஆறாவது பொதுக்கூட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பொதுக்குழு நிகழ்வுகளைச் சிறப்பித்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தல், மாநில நிர்வாகிகள், மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம், பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளோடு பிற நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.