வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் 12.03.2021 அன்று துவங்கப்பட்ட வேட்பு மனு தாக்கலானது 19.03.2021 அன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை இந்திய தேர்தல் […]
மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 37 தொகுதிகளில் சமக போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்து விட்டதாகவும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம். வெற்றிவாகை சூட உழைப்போம் என சரத்குமார் தெரிவித்துள்ளார். […]
கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமக பொதுக்குழு கூட்டத்தில் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும், மக்கள் […]
கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது என சரத்குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். […]
எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது பற்றி பேசத் திட்டமிட்டுள்ளோம் என சரத்குமார் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதிமய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்று சந்தித்து பேசினார். கமல்ஹாசனை சந்தித்து பேசிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மரியாதை, விகிதாசாரம் உள்ளது என்றுதான் அதிமுக உடன் இணைந்து பயணித்தோம். ஆனால் இப்போது அது இல்லை. சமக-வை அழைத்து […]
மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி விலகியது. பின்னர், இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாகிகள்/ மண்டல அமைப்புச் செயலாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் உறுப்பினர்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் விதி எண் 14,பிரிவு 4ன் படி, கட்சியின் ஆறாவது பொதுக்கூட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் […]
பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்குமுன்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் ஒன்று, இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால் போட்டியிட மாட்டோம். மேலும், கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவோம். தேர்தலில் […]