அரசு ஊழியர்கள் மீது போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து – முதல்வர் ..!

Chief Minister MK Stalin has announced that the cases against civil servants during the last regime will be canceled.

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல அறிவிப்புகளை அறிவித்தார். அதில், கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை ரத்து எனவும் போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம், பணி நீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.

வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றிருந்தால் மீண்டும் அதே இடத்தில் பணி தரப்படும் என அறிவித்துள்ளார்.