திருச்சியிலும் சசிகலாவிற்கு போஸ்டர்.. தொடர்ந்து போஸ்டர் ஓட்டும் அதிமுகவினர்..!

Posters welcoming Sasikala in Trichy have been put up. This poster is affixed by AIADMK former district councilor Ira Annathurai.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா  கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

சசிகலா விடுதலையை தொடர்ந்து, அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டடினர். இந்நிலையில், அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் சசிகலாவை வரவேற்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை அதிமுகவை சார்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இரா.அண்ணாதுரை ஒட்டி உள்ளார். இதற்கு முன் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நெல்லையில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கப்பட்ட நிலையில், இவரும் நீக்கப்படுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று தூத்துக்குடியில்அதிமுக நிர்வாகி (அதிமுக முன்னாள் பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) ராபர்ட் ஹென்றி சசிகலா வரவேற்று போஸ்டர் ஓட்டினார்.