இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பில், திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளது. நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை அழிக்கலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
unknown node