கழுத்தில் அதிமுக துண்டு.. முத்து மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த சசிகலா..!

Sami performed darshan at the Mariamman Temple in Sasikala Hosur. Sasikala is wearing a piece of red, black and white around her neck.

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா தமிழக எல்லைப்பகுதி அருகே வந்தபோது வேறு காருக்கு மாறினார். தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வரும் வழி முழுவதும் சிறப்பான வரவேற்பை கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கினர். நோட்டீசை வாங்கிய வழக்கறிஞர் காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என தெரிவித்தார்.

சசிகலா கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தநிலையில்,ஓசூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில்சாமிதரிசனம்செய்தார். அப்போதுசசிகலாதனது கழுத்தில் சிகப்பு ,கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட துண்டு அணிந்து உள்ளார்.இன்று மாலை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.