அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் – தொடங்கியது அதிமுக பிரசார பொதுக்கூட்டம்

AIADMK initiates 2021 assembly election campaign with public meeting at Royapettah YMCA Grounds in Chennai

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம்  தொடங்கியது.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ,அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ,அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.