#BREAKING: அதிமுக கொடி – சசிகலாவுக்கு நோட்டீஸ்..!

Krishnagiri police have issued a notice to Sasikala for using the AIADMK flag in his car in violation of the ban.

தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவிற்கு கொரோனா இருந்ததால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார்.

இந்நிலையில், தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் அளித்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து கொடியை போலீசார் அகற்றவில்லை. ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.

தமிழகம் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்து போது திடீரென வேறு ஒரு காருக்கு மாறினார். ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கார் அதிமுக நிர்வாகி ஒருவரின் கார் என கூறப்படுகிறது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு போலீசார் தடை விதித்த நிலையில், சசிகலா வேறு ஒரு காருக்கு மாறினார்.