ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – புதிய விலைப்பட்டியல் வெளியீடு!!

Following the Chief Minister's order to reduce the price of Aavin milk by Rs. 3 per liter, a new price list has been released.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார்.  அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனைபடி,சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.43 லிருந்து ரூ.40 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.21.50 லிருந்து ரூ.20 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.23.50 லிருந்து ரூ.22 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.25.50 லிருந்து ரூ.24 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், டீமேட் (1000 மிலி) ரூ.60 லிருந்து ரூ.57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பால் அட்டை விற்பனைப்படி, சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.40 லிருந்து ரூ.37 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.22.50 லிருந்து ரூ.21 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.24.50 லிருந்து ரூ.23 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.19.50 லிருந்து ரூ.18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

unknown node