திகார் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் , மசாஜ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெய்ன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், சிறை விதிமுறைகளை சத்யேந்திர ஜெய்ன் மீறி வருவதாகவும், அதனால் ஜாமீன் கொடுக்க கூடாது எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயந்த் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் சத்யேந்திர ஜெய்ன்க்கு மசாஜ் நடைபெறுகிறது. மற்றவர்களுடன் சகஜமாக உரையாற்றி வருகிறார்.
மேலும், அவர் வெளி உணவுகளை உட்கொள்கிறார். செல்போன் உபயோகிறார் என அவர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
unknown node