ஈபிஎஸ்ஸை கண்டித்து ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் சலசலப்பு..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியாக சுவரொட்டிகளை

தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே.

இனிமேல் தொடர்ந்தால் கழகத்தை முற்றுகையிடுவோம் என அதிமுக தொண்டர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியாக சுவரொட்டிகளை ஒட்டினர். தேர்தல் தோல்விக்குப் பிறகும் சுவரொட்டி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்தார். ஆனால் இருவருமே தனித்தனியாக அறிக்கை வெளியிடுவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் மானூரில் அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஓன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே ! அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேல் தொடர்ந்தால் கழகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node