"பொதுப்பணித்துறையில் இவைகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும்"- தமிழக அரசு அரசாணை!

A civil and electrical contractors can participate separately to bid in the public sector

பொதுப்பணித்துறையின் கட்டுமான பணிகளில் சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 27.08.2021 அன்று சட்டப் பேரவையின் அவையில் பொதுப்பணித் துறைக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது,பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிற்குள்ள சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் (தனி ஒப்பந்தம்) மேற்கொள்ளப்படும் என்ற ​அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் சிவில் மற்றும் மின்சாரப் பணிகளை தனித்தனி ஒப்பந்தங்களிலும்,கட்டிடம் தொடர்பாக ஒரே ஒப்பந்தத்திலும் நிறைவேற்றுவதற்கான நிதி வரம்பை நிர்ணயித்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுப்பதற்கு சிவில் மற்றும் எலக்ட்ரிக் ஒப்பந்ததாரர்கள் தனித்தனியே பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node