#ELECTIONBREAKING: புதுச்சேரியில் 4-வது அணியா..? தேமுதிக தனித்து போட்டி..!

Secretary of State VVP Velu has informed that DMDK is a solo contestant in Pondicherry.

புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டியிடம் என மாநில செயலாளர் விவிபி வேலு தகவல் அளித்துள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் -அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது.இதற்கிடையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர்.

இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இணையுமா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், தேமுதிக தனித்து போட்டியிடம் என மாநில செயலாளர் விவிபி வேலு தகவல் அளித்துள்ளார். தேமுதிக தனித்து போட்டிட்டால் புதுச்சேரியில் 4-வது அணியாக தேமுதிக இருக்கும் என கூறப்படுகிறது.