புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ரோடியர் மில் (AFT ) திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது சிவி சண்முகம் கூறியதாவது, 80க்கு பிறகு புதுச்சேரியை காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, பாஜக தான் ஆண்டு வருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் இவர்களால் புதுச்சேரியில் எந்த வளர்ச்சியாவது இருக்கிறதா? என்றும் புதுச்சேரியில் கூட்டணி […]
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் […]
ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற […]
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார். இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து […]
புதிய கல்வி கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள். – என புதுச்சேரி திமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘ புதுச்சேரியில் செயல்படும் அரசுப்பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இது […]
மத்திய அரசு ஊழியர்களை போல புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை அரசு உயர்த்துவது வழக்கமான ஒன்று. அப்படி தான் அண்மையில், மத்திய அரசு ஊளியர்களுக்கு அகவிலைப்படியானது, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. புதுச்சேரி அரசு ஊழியர்களும் மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டில் வருவதால், புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அதே போல, அகவிலைப்படியானது […]
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உடன் மின்துறை ஊழியர்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்த பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி மின்சாரத்துறையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று வரை நீடித்தது. கடந்த ஞாயிற்று கிழமை புதுசேரி காவல்துறையினர் , துணை ராணுவபடையின் உதவியுடன் […]
புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி. புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது […]
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி. புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதே போல் காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது. இந்த ஊர்வலம் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட […]
காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது. – இவ்வாறு புதுசேரி முதல்வர் ரங்கசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரைக்காலில் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தன் மகளை விட அதிக மார்க் எடுத்துவிட கூடாது என பால மணிகண்டனின் சக மாணவியின் தயார் சகாயராணி விஷம் கொடுத்துள்ளார். அதன் […]
காரைக்காலில் மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் விசாரிக்க மருத்துவர் குழுவை புதுவை அரசு நியமித்துள்ளது. புதுசேரி, காரைக்காலில் நேரு நகர் பகுதியை சேர்த்தவர் ராஜேந்திரன் இவரது இரண்டாவது மகன் பாலமணிகண்டன் அந்த பகுதி தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் பாலமணிகண்டன் உடன் படிக்கும் சக மாணவியின் தயாரான சகாயராணி விட்ட்டோரியா என்பவர், தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்து விட கூடாது என்பதற்காக, குளிர்பானத்தில் விஷம் கலந்து , […]
மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டமானது ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதன் பின் ஆளுநர் உரையை வாசித்ததையடுத்து பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ரூ.11,000 கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய […]
புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்து போலீஸ் நடவடிக்கை. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை […]
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு. புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 1-8-ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது; நகரில் 9-முதல் 1 மணி வரையும், கிராமங்களில் 9:30 முதல் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவித்தார். மேலும், வருகை பதிவேடு கிடையாது, சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1-8-ஆம் […]
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30 ஆம் தேதி) தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 15 ஆண்டுகளுக்கு 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். 2021-2022-ம் […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் எதிர்ப்பு. கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மேகதாது அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத முதல்வர் ரங்கசாமி தலைமையிலான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை 19-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து […]
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில், மீனவ குடும்பங்களின் வாஅவாதாரம் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க, அவர்களுக்கு நிவாரண தொகை வாழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் […]