3 நாள் சுற்றுப்பயணம் : வயநாடு மாவட்ட ஆட்சியருடன் ராகுல் காந்தி ஆலோசனை!

Rahul Gandhi, who is on a 3-day tour of Kerala, has consulted with the Wayanad District Collector.

3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல்காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி  சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி கேரளா சென்றுள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

ராகுல்காந்தி வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே.ஆர்.வெங்கராவால்  உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை நேற்று திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். அதன் பின்பதாக தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.